/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கண்காட்சி ரூ. 30 ஆயிரம் ரொக்க பரிசு
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கண்காட்சி ரூ. 30 ஆயிரம் ரொக்க பரிசு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கண்காட்சி ரூ. 30 ஆயிரம் ரொக்க பரிசு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிவியல் கண்காட்சி ரூ. 30 ஆயிரம் ரொக்க பரிசு
ADDED : பிப் 28, 2025 10:27 PM

ஊட்டி, ; ஊட்டி, இந்தி பிரச்சார சபாவில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவியல் கண்காட்சியில், சாதித்த பள்ளி மாணவர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை ஆகியவை சார்பில், ஊட்டி இந்தி பிரச்சார சபா வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிவியல் கண்காட்சி நடந்தது.
வனவர் கிருஷ்ணகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய துணை பொறியாளர் ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் சுவாதி, பூஜா, ஈகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் பிரமோஸ் ஆகியோர், நடுவர்களாக செயல்பட்டு, சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
அதில், 'நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் கருவி; நிலத்தடி நீர் அறிதல்; மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு; வனங்களில் பிளாஸ்டிக் தவிர்க்க முயற்சிகள்; இயற்கை விவசாயம், மற்றும் சிறுதானியங்களின் அவசியம்,' ஆகியவை சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதில், கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய்; பெரிய சோலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, இரண்டாவது பரிசாக, 8,000 ரூபாய்; மூன்றாவது பரிசாக, காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 7,000 ரூபாய் மற்றும் எப்பநாடு, கூக்கல்தொரை அரசு பள்ளிகளுக்கு, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.
இயற்கை விவசாய ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை நிர்வாகி வெங்கடேசன் செய்திருந்தார்.