/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணறு இருந்தும் குடிநீருக்கு வழி இல்லை: சிரமப்படும் பழங்குடியின மக்கள்
/
கிணறு இருந்தும் குடிநீருக்கு வழி இல்லை: சிரமப்படும் பழங்குடியின மக்கள்
கிணறு இருந்தும் குடிநீருக்கு வழி இல்லை: சிரமப்படும் பழங்குடியின மக்கள்
கிணறு இருந்தும் குடிநீருக்கு வழி இல்லை: சிரமப்படும் பழங்குடியின மக்கள்
ADDED : ஏப் 12, 2024 11:43 PM

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுருளிமூலா கிராமத்தில் கிணறு இருந்தும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுருளிமூலா பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது.
பனியர் சமுதாயத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த கிணற்றின் மின்மோட்டார், பழுதடைந்து பல ஆண்டுகள் கடந்தும், இது வரை அதனை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மோட்டார் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் காணாமல் போய்விட்டது.
இதனால், குடிநீர் வினியோகம் செய்யாமல், தண்ணீர் இருந்தும் தற்போது குடிநீர் கிணறு பாழடைந்து, குடிநீர் மாசடைந்து உள்ளது. இதனை பராமரித்து மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்கினால் மக்களுக்கு பயனாக இருக்கும். ஊராட்சி நிர்வாகம் இது குறித்து கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தனியார் ஒருவரின் தரைமட்ட கிணற்றில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக மிகவும் தாழ்வான பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக, அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில், இது போன்ற பழங்குடியின கிராமங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருவது குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அதிகாரிகள் இதுபோன்ற கிராமங்களில் நேரில் ஆய்வு செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

