/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனைவரும் ஓட்டளிப்பது அவசியம்: விழிப்புணர்வு மனித சங்கிலி
/
அனைவரும் ஓட்டளிப்பது அவசியம்: விழிப்புணர்வு மனித சங்கிலி
அனைவரும் ஓட்டளிப்பது அவசியம்: விழிப்புணர்வு மனித சங்கிலி
அனைவரும் ஓட்டளிப்பது அவசியம்: விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : மார் 22, 2024 10:27 PM

ஊட்டி;ஊட்டியில் வரும் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்புகள் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நடந்தது.
'இந்திய தேர்தல் ஆணையம், தகுதியான அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்க வேண்டும்,' என, பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு கட்டமாக, ஊட்டியில் 'தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்' என்ற தலைப்பில், மனித சங்கிலி நடந்தது.
இதில், 350க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் மற்றும் சமூகநலத்துறை பணியாளர்கள், 'ஓட்டு போடுங்கள் - ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு. இதில், அரசு அதிகாரிகள், தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.