ADDED : ஏப் 01, 2024 11:56 PM
ஊட்டி;ஊட்டியில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேர்தல் ஆணையம் சார்பில், அனைவரும் தவறாமல், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஊட்டியில் மகளிர் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ரயில் நிலையத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
பேரணியின் போது, 'ஓட்டு போடுங்கள்' 'ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, காபி ஹவுஸ் சந்திப்பில் பேரணி நிறைவடைந்தது.
தொடர்ந்து, தனார்வ அமைப்பினர் சார்பில், கலைநிகழ்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில், தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழு அலுவலர்கள் உட்பட, ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.
