/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறப்பு மலை ரயில் ஆக.,5வரை நீட்டிப்பு
/
சிறப்பு மலை ரயில் ஆக.,5வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:23 AM

குன்னூர்:ஊட்டி சிறப்பு மலை ரயில் ஆக., 5 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஊட்டி, குன்னூர் இடையே தினமும் தலா 4 முறையும், மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது.
நடப்பாண்டு, கடந்த மார்ச், 29 முதல் வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, 4 நாட்களுக்கு ஊட்டி - மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் மற்றும் ஊட்டி - கேத்தி 'சுற்று சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஜூலை 1ம் தேதி வரை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் ஆக., 5ம் தேதி வரை இந்த சிறப்பு மலை ரயில் இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊட்டி - கேத்தி சிறப்பு மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.