/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் மிரட்டி பணம் பறிப்பு; தி.மு.க., நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது

ADDED : ஏப் 29, 2024 01:31 AM

கூடலுார்;கூடலுாரில் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் தி.மு.க., நகர துணைச் செயலாளர் ஜபருல்லா. இவர் நேற்று முன்தினம், காலை, தேவர்சோலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இரண்டாவது மைல் அருகே, ஆட்டோவில் வந்த நான்கு பேர், அவரை, மறித்து கத்தியை கட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த, 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சென்றனர். தொடர்ந்து, கூடலுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கூடலுார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (பொ.,), எஸ்.ஜ., கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, இரண்டாவது மைல் பகுதியை சேர்ந்த, தி.மு.க., அயலக அணி நிர்வாகி விமல், 40, ஆட்டோ டிரைவர் தேவராஜ், 45, ரதீஷ், 36, வைசாக், 32, ஆகியோரை கைது செய்து,பணம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.