ADDED : ஏப் 29, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில், அன்னுாரில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், கண் புரை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை உள்ளிட்ட குறைபாடுகளுக்காக, 102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில், 21 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாமில், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சங்க உதவித்தலைவர் நாகராஜன், செயலாளர் ரவி, உதவி செயலாளர் கணேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், ரங்கராஜன் பங்கேற்றனர்.

