/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நம்பிக்கை மையம்...! எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு; மாநில அளவில் நீலகிரியில் மிக குறைவு
/
நம்பிக்கை மையம்...! எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு; மாநில அளவில் நீலகிரியில் மிக குறைவு
நம்பிக்கை மையம்...! எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு; மாநில அளவில் நீலகிரியில் மிக குறைவு
நம்பிக்கை மையம்...! எய்ட்ஸ் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு; மாநில அளவில் நீலகிரியில் மிக குறைவு
ADDED : ஏப் 23, 2024 09:57 PM
ஊட்டி : சர்வதேச சுற்றுலா மையமாக உள்ள நீலகிரியில் ஏற்பட்ட போதிய விழிப்புணர்வால் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
நீலகிரியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் கீழ், ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கூடலுார் ஆகிய அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், கேத்தி, நெடுகுளா, தங்காடு ஓரநள்ளி, நெலாக்கோட்டை ஆகிய இடங்களில் 'நம்பிக்கை மையம்' செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில், எச்.ஐ.வி., தொற்று பரிசோதனை, கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர். தவிர, எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்கள், தாய்சேய் நலத்திட்டம், கூட்டு மருந்து சிகிச்சை பிரத்யேகமாக அளிக்கப்படுகிறது.
விழிப்புணர்வால் வாழ்வு
எச்.ஐ.வி., எனும் வைரஸ் மூலமே எய்ட்ஸ் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலில் நிரந்தர பாதிப்பு ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைய தொடங்கிய பிறகு பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு, உடல் உருக்குலைந்து பரிதாபகரமான நிலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நோய் பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம், எஸ்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து குழந்தைக்கு பரவுதல் என மூன்று நிலைகளில் பரவுகிறது.
மரணங்கள் குறைவு
இந்நிலையில், தொடர் விழிப்புணர்வு, எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் சிகிச்சை முறைகள் போன்றவற்றால் எய்ட்ஸ் நோய் மரணங்கள் இப்போது குறைந்துள்ளன. எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளும் அதிகரித்து உள்ளது.
நீலகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மாவட்ட மேலாளர் அறிவழகன் கூறுகையில்,''ஊட்டி சர்வதேச சுற்றுலா மையமாக உள்ளது. ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாகும்.
எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுக்கும் நோக்கில் சிறப்பு கவனம் செலுத்தி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணத்தினால், 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 498 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனை, நம்பிக்கை மையங்களில், 3 லட்சம் 'காண்டம்' வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்தில் மாதத்திற்கு, சராசரியாக, 1000 'காண்டம்' எடுத்து சென்று மக்கள் பயன்படுத்தி போதிய விழிப்புணர்வுடன் உள்ளனர்.
தமிழக அளவில் நீலகிரியில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு,'' என்றார்.

