/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில்: போக்குவரத்து பாதிப்பு
/
தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில்: போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில்: போக்குவரத்து பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மூங்கில்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 23, 2024 05:01 AM

கூடலுார்: கூடலுார் தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் துார் விழுந்ததால், 3 மாநில இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில் கடந்த வாரம் முதல் கோடைமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையின் போது சாலையில் மரங்கள் விழுந்து வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மண்ணரிப்பு, மண் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 தொரப்பள்ளி அருகே, மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்த மூங்கில் துார் சாய்ந்து, நீலகிரி, கேரளா, கர்நாடக இடையே வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை உதவி பொறி யாளர் பிரேம்குமார், தீயணைப்புத் துறையினர், பொக்லைன் உதவியுடன் மூங்கில் துாரை அகற்றி, இரவு, 11:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலையின் ஓரங்களில் காய்ந்து உள்ள மூங்கில்கள் அடிக்கடி சாலையில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப் படுகிறது. எனவே, சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள காய்ந்த மூங்கில்களை முன்னெச்சரிக்கையாக அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

