/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார் சாலையில் விழுந்த மரம் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு
/
கூடலுார் சாலையில் விழுந்த மரம் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு
கூடலுார் சாலையில் விழுந்த மரம் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு
கூடலுார் சாலையில் விழுந்த மரம் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 24, 2024 09:37 PM

கூடலுார்:கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, 'ஹெல்த் கேம்ப்' அருகே பெரிய மரம் விழுந்து, மூன்று மாநிலங்கள் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலுார் நடுவட்டம், முதுமலை பகுதிகளில் பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு மழையுடன் வீசிய காற்றில், கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, மேல் கூடலுார் ஹெல்த் கேம்ப் அருகே, பெரிய மரம் விழுந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி, கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்பட்டன. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மதியம் மரத்தை அறுத்து அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.