/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள்; தமிழக ---கேரளா போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஆக 21, 2024 11:37 PM

பந்தலுார்: பந்தலுார் நீர்மட்டம் பகுதியில் மரங்கள் விழுந்ததால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பந்தலுார் தேவாலா பகுதிகளில் நேற்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில், தேவாலாவில் இருந்து, பந்தலுார் மற்றும் கேரளா வயநாடு செல்லும் சாலையில் உள்ள நீர்மட்டம் என்ற இடத்தில் இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தன. இதனால், வாகன போக்குவாரத்தில் தடை ஏற்பட்டது.
கூடலுாரில் இருந்து வந்த வாகனங்கள் அத்திக்குன்னா, உப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டது. கனரக வாகனங்கள் தேவாலாவில் நிறுத்தப்பட்டன. மேலும், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கேரளா வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து வந்த, இருமாநில அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டன.
மேலும், சேரம்பாடி- தாளூர் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுங்கம் பகுதியில் ராமாயி என்பவரின் வீடு இடிந்தது.
தொடர்ந்து, கூடலுார் தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால், போக்குவரத்து சீரானது.