/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்றினால் ஆபத்தில்லை
/
விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்றினால் ஆபத்தில்லை
விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்றினால் ஆபத்தில்லை
விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்றினால் ஆபத்தில்லை
ADDED : ஆக 27, 2024 02:28 AM
குன்னுார்;வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் விழும் நிலையில் உள்ள யூகலிப்டஸ் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை மற்றும் காற்றின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் யூகலிப்டஸ் மரங்கள் விழுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், வெலிங்டன் பேரக்ஸ் பகுதி சாலையோரங்களில் மிகவும் உயரமான யூகலிப்டஸ் மரங்கள் விழும் அபாய நிலையில் இருந்தும் வெட்டி அகற்றப்படவில்லை.
சில மரங்கள் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளதால் அருகிலுள்ள 'வாட்டர் ஏ.டி.எம்' மற்றும் பயணிகள் நிழற்குடை, கடைகள், பார்க்கிங் தளத்தில் நிற்கும் வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும்.