/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெள்ளை பூண்டு விதைப்பு பணி; வறட்சியிலும் விவசாயிகள் ஆர்வம்
/
வெள்ளை பூண்டு விதைப்பு பணி; வறட்சியிலும் விவசாயிகள் ஆர்வம்
வெள்ளை பூண்டு விதைப்பு பணி; வறட்சியிலும் விவசாயிகள் ஆர்வம்
வெள்ளை பூண்டு விதைப்பு பணி; வறட்சியிலும் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மார் 29, 2024 10:13 PM

கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தில் வறட்சியிலும், வெள்ளைப்பூண்டு விதைப்பு பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. அடுத்தப்படியாக, நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில் மலைக்காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, இதே நேரத்தில், ஒரு கிலோ பூண்டுக்கு, உச்சபட்ச விலையாக, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. நீலகிரி பூண்டுக்கு, சுவை, மணம் மருத்துவ குணம் நிறைந்துள்ளதால், வெளி மார்க்கெட்டுகளில் நல்ல 'கிராக்கி' உள்ளது. இதனால், விவசாயிகள் கூடுமானவரை, வெள்ளைப்பூண்டு விதைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். தற்போது, பகல் நேரத்தில் கடுமையான வெயிலான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில், கிணற்றில் தாழ்வான பகுதியில் இருந்து, மோட்டார் உதவியுடன், தண்ணீரை சேமித்து, வறட்சி நாட்களில் தோட்டத்திற்கு பாய்ச்ச விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.