/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை வழித்தடத்தில் கேளிக்கை விடுதிகள் அகற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
யானை வழித்தடத்தில் கேளிக்கை விடுதிகள் அகற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை
யானை வழித்தடத்தில் கேளிக்கை விடுதிகள் அகற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை
யானை வழித்தடத்தில் கேளிக்கை விடுதிகள் அகற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 01:50 AM

பெ.நா.பாளையம்;வனத்தையொட்டி உள்ள யானை வழித்தடத்தில் உள்ள கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளை அகற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் நினைவஞ்சலி கூட்டம் தடாகம் அருகே வரப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், யானை வழித்தடத்தில் உள்ள கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவைகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பயிர் கடன், பண்ணைக்கடன், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து விவசாய பணிகளுக்கும், 80 சதவீதம் மானியத்தில் இயந்திரங்கள் வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். பால் உற்பத்தி செலவுக்கு ஏற்ப, பால் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் அல்லது கள்ளுக்கடை திறக்க அனுமதிக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உயிர் நீத்த கோவில்பட்டி பயணியர் விடுதியில் நினைவிடம் அமைக்க வேண்டும். கம்ப்யூட்டர் வழி இ-அடங்கல் மற்றும் சொத்து வரி செலுத்தும் திட்டம் அமல்படுத்த வேண்டும். விவசாய மின்சார சீர்திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். வளர்ச்சி பணிகளுக்காக, விவசாய நிலம் அரசால் கையகப்படுத்தும் போது நிலம், வீட்டுமனை நிலம், தொழிற்சாலை நிலம் என்ற பாகுபாடு இன்றி சந்தை விலை மதிப்பில், 6 மடங்கு இழப்பீடு தர வேண்டும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் விடுபட்ட குளம், குட்டைகளில் நீர் நிரப்ப ஆவண செய்ய வேண்டும்.
நொய்யல் ஆற்றில்இருந்து குளங்களுக்கு அமைக்கப்பட்ட அனைத்து ராஜ வாய்க்கால்களும், ஆண்டுக்கு ஒரு முறையாவது துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். ராஜ வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு மற்றும் சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை திட்ட இயக்குனர் அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.