/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை உரம் தயாரிப்பு வாங்கி செல்லும் விவசாயிகள்
/
இயற்கை உரம் தயாரிப்பு வாங்கி செல்லும் விவசாயிகள்
ADDED : ஆக 21, 2024 11:30 PM

கோத்தகிரி : கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கும் இயற்கை உரத்தை, விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கோத்தகிரி பேரூராட்சியில், 21 வார்டுகளில் இருந்து, அன்றாடம் வெளியேறும் குப்பைகள், வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்படுகிறது. இங்கு, மட்கும் குப்பை இயற்கை உரமாகவும், மட்காத குப்பை மறு சுழற்சிக்கும் உட்படுத்தப்படுகிறது.
குப்பை மேலாண்மையில், 30க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாத்திகளில் கொட்டப்படும் மட்கும் குப்பைகள் தயாரானவுடன், சல்லடையில் சலித்து, தரமான இயற்கை உரமாக்கப்படுகிறது.
கோத்தகிரியில் இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கு தயாரிக்கும் இயற்கை உரத்திற்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ இயற்கை உரம், ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வீட்டு தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் கீரை வகைகளுக்கு பயன்படுத்தப்படுவதால், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.