/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளைக் கிழங்கு அறுவடை; விவசாயிகள் தீவிரம்
/
உருளைக் கிழங்கு அறுவடை; விவசாயிகள் தீவிரம்
ADDED : மே 01, 2024 10:49 PM

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, நீர் ஆதாரம் உள்ள மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு, உருளைக்கிழங்கு குறைந்த பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
உருளைக்கிழங்கு பயிர் செய்ய அதிக முதலீடு தேவை என்பதால், விவசாயிகள் கூடுமானவரை கடன் பெற்று, சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
வரலாறு காணாத வெயில் காரணமாக, நீர் ஆதாரங்கள் வறண்ட நிலையிலும், ஓடைகளை மறித்து, இரவு முழுவதும், சேகரமாகும் தண்ணீரை காலை நேரங்களில், 'மோட்டார் பம்ப்' உதவியுடன் தோட்டங்களுக்கு பாய்ச்சி, பயிரை பராமரித்து வருகின்றனர்.
தற்போது, ஊட்டி உழவர் சந்தை மார்க்கெட்டில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் மண்டிகளில் 80 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், 45 கிலோ எடை கொண்ட, ஒரு மூட்டைக்கு, 3, 500 ரூபாய் விலை கிடைக்கிறது.
விதை, பூச்சி, மருந்து உட்பட, இடுப்பொருள்களின் விலை உயர்வு, தோட்டப் பராமரிப்பு செலவு, மண்டி கமிஷன் மற்றும் ஏற்று இறக்கு கூலி உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்தாலும், விவசாயிகளுக்கு, இழப்பு இல்லாமல், ஓரளவு விலை கிடைத்து வருகிறது.
இதனால், கடும் வெயிலிலும் தோட்டங்களில் உருளைக்கிழங்கு அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

