/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காற்றினால் வாழை மரங்கள் பாதிப்பு பாதுகாக்க போராடும் விவசாயிகள்
/
காற்றினால் வாழை மரங்கள் பாதிப்பு பாதுகாக்க போராடும் விவசாயிகள்
காற்றினால் வாழை மரங்கள் பாதிப்பு பாதுகாக்க போராடும் விவசாயிகள்
காற்றினால் வாழை மரங்கள் பாதிப்பு பாதுகாக்க போராடும் விவசாயிகள்
ADDED : ஜூலை 03, 2024 02:21 AM

கூடலுார்;கூடலுாரில் மழையின் போது வீசும் காற்றிலிருந்து நேந்திரன் வாழை மரங்களை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.
கூடலுார் பகுதி விவசாயிகள், நீண்ட கால பயன் தரும் பயிர்களை தவிர, குறுகிய காலத்தில் பலன் தரும் காய்கறிகள், நெல், இஞ்சி, நேந்திரன் வாழை மரங்களை பயிரிட்டு வருகின்றனர். தற்போது ஓரளவு விலை கிடைத்து வருகிறது. விவசாயிகள் நேந்திரன் வாழை உற்பத்தியில் அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடவு செய்யப்பட்ட நேந்திரன் வாழை மரங்களிலிருந்து, வாழைத்தார் அறுவடை செய்ய துவங்கியுள்ளனர். ஆனால், காட்டு யானைகள் தோட்டத்தில் நுழைந்து வாழை மரங்களை சேதம் செய்து வருகிறது. விவசாயிகள் கண்விழித்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர், மரங்களில் பரண் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையுடன், வீசும் காற்றில், புளியம்பாறை, பாடந்துறை, மண்வயல், கூத்தர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை, 4,000 மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், விவசாயிகள் கயிறுகளை பயன்படுத்தி வாழை மரங்களை, இணைத்து கட்டி பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன் வாழை மரங்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறோம். இந்நிலையில், காற்றில் வாழை மரங்கள் சாய்வதால் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். யானை மற்றும் காற்றில் பாதிக்கப்படும் வாழை மரங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,'என்றனர்.