/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழை மரங்களை சேதப்படுத்திய யானையால் விவசாயிகளுக்கு நஷ்டம்
/
வாழை மரங்களை சேதப்படுத்திய யானையால் விவசாயிகளுக்கு நஷ்டம்
வாழை மரங்களை சேதப்படுத்திய யானையால் விவசாயிகளுக்கு நஷ்டம்
வாழை மரங்களை சேதப்படுத்திய யானையால் விவசாயிகளுக்கு நஷ்டம்
ADDED : செப் 09, 2024 09:52 AM

கூடலுார் : கூடலுார் புளியாம்பாறை முண்டகுன்னு பகுதியில், விவசாய தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை நேந்திரன் வாழை; பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.
கூடலுார் புளியாம்பாறை முண்டகுன்னு குடியிருப்பை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடும் யானைகள், இரவில், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒரு யானை, நடராஜ் என்பவரின், வாழை தோட்டத்தில் நுழைந்து, நேந்திரன் வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தியது.
பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். எனினும், யானை நுாற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வனச்சரகர் சஞ்சீவ் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'சேதமடைந்த, வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்; காட்டு யானைகள் குடியிருப்புக்குள், நுழையாத வகையில் கண்காணித்து விரட்டப்படும்,' என்றனர்.