/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மோட்டார் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
/
மோட்டார் உதவியுடன் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
ADDED : மே 31, 2024 11:37 PM

கோத்தகிரி;கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலான காலநிலை நிலவுவதால், 'மோட்டார் செட்' உதவியுடன், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக வெயிலாலான காலநிலை நிலவுகிறது. இதனால், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் ஈரப்பதம் குறைந்து வருகிறது.
நடப்பாண்டு, உழவு செய்த விவசாய நிலங்களில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறி பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். குறிப்பாக, நடப்பு போகத்தில் கேரட் பயிரிடுவதில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தற்போது, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கணிசமான நிலப்பரப்பில் கேரட் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நிலத்தில் போதிய ஈரம் இல்லாததால், குளங்களில் தேங்கிய தண்ணீரை, மோட்டார் பம்ப் உதவியுடன், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

