/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கன்வாடியை சுற்றி புதர்: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்
/
அங்கன்வாடியை சுற்றி புதர்: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்
அங்கன்வாடியை சுற்றி புதர்: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்
அங்கன்வாடியை சுற்றி புதர்: சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம்
ADDED : ஏப் 22, 2024 11:07 PM
பந்தலுார்:பந்தலுார் சேரம்பாடி அங்கன்வாடி அருகே சிறுத்தை நடமாடுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி -சப்பந்தோடு சாலையில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. வனத்தை ஒட்டி அமைந்துள்ள அங்கன்வாடியின் பின்பகுதியில் புதர்கள் சூழ்ந்துள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் சிறுத்தை நடந்து செல்வதை இப்பகுதியினர் பார்த்துள்ளனர்.
இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளனர்.
பெற்றோர் கூறுகையில், 'பந்தலுாரில் அங்கன்வாடி சென்று திரும்பிய வடமாநில தொழிலாளி குழந்தையை சிறுத்தை கொன்ற நிலையில், தற்போது சப்பந்தோடு அங்கன்வாடி மையம் அருகே சிறுத்தை நடமாடி வருவது குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், புதர்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.