/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவமனையில் குறைந்த டாக்டர்கள்: நோயாளிகள் அவதி
/
மருத்துவமனையில் குறைந்த டாக்டர்கள்: நோயாளிகள் அவதி
மருத்துவமனையில் குறைந்த டாக்டர்கள்: நோயாளிகள் அவதி
மருத்துவமனையில் குறைந்த டாக்டர்கள்: நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 01:19 AM
பந்தலுார்;பந்தலுார் அரசு மருத்துவ மனையில் டாக்டர்கள் குறைவால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
பந்தலுாரில், அரசு தாலுகா தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நெல்லியாளம் நகராட்சி மற்றும் சேரங்கோடு, நெலாக்கோட்டை ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், இந்த மருத்துவமனையை நம்பி உள்ளனர்.
மருத்துவமனைக்கு, 5- டாக்டர்கள் தேவைப்படும் நிலையில், இங்கு வரும் டாக்டர்கள் ஒரு ஆண்டை மட்டும் நிறைவு செய்து இடம் மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர். இதனால் பெரும்பாலான நாட்களில் டாக்டர் பற்றாக்குறையால், நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது, 4- டாக்டர்கள் பணியாற்றி வந்த நிலையில், அதில் ஒரு பெண் கண் டாக்டர் பணியாற்றினார். இங்கு கண் பரிசோதனைக்கான எந்த உபகரணங்களும் வழங்கப்படாத நிலையில், ஓரளவு மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர், தற்போது கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு கண் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நிலையில், பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கண் பரிசோதனைக்கான உபகரணங்களை வழங்கி, கண் மருத்துவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு டாக்டர் ஒருவர் நீண்ட விடுப்பில் சென்று விட்டார்.
500 நோயாளிகள் இரு டாக்டர்கள்
இதனால், தற்போது, 2- டாக்டர்கள் மட்டும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை முழுமையாக பரிசோதித்து ஆலோசனை வழங்க முடியாத நிலை, இரண்டு டாக்டர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும், பிரேத பரிசோதனை, அவசர சிகிச்சை போன்றவை வந்தால், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு இங்கு வரும் அனைத்து நோயாளிகளும், கூடலுார் அல்லது ஊட்டி, கேரளா மாநிலம் வயநாடு தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
எனவே, இந்த மருத்துமனைக்கு போதிய அளவு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.