/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு; வெறிச்சோடிய படகு இல்லம்
/
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு; வெறிச்சோடிய படகு இல்லம்
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு; வெறிச்சோடிய படகு இல்லம்
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு; வெறிச்சோடிய படகு இல்லம்
ADDED : ஆக 20, 2024 10:06 PM

குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், படகு இல்ல ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.
மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதில், நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது கன மழை பெய்கிறது.
மழையின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால், சுற்றுலா மையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கடை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். சிம்ஸ் பூங்காவில் வழக்கத்தை விட, மிகவும் குறைந்தளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஏரியில் படகு சவாரிக்கும் ஓரிரு சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். இதனால் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்கு, பூங்காவை தயார்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.