/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு
/
நீலகிரியில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு
ADDED : ஏப் 18, 2024 05:15 AM

குன்னுார் : நீலகிரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
ஆண்டு தோறும், ஏப்., 14ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு, பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி, மக்களிடையே தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன், குன்னுாரில் நிலைய அலுவலர் குமார், கோத்தகிரியில் நிலைய அலுவலர் பிரேமானந்த், கூடலுாரில் மார்ட்டின் ஆகியோர் தலைமையில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
குன்னுாரில் மவுண்ட் ரோடு சிம்ஸ் பூங்கா, பேரக்ஸ் உட்பட பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தீத்தடுப்பு முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வரும், 20ம் தேதி நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

