/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
/
தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
தொழிற்சாலை அருகே வனத்தீ: கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
ADDED : ஏப் 09, 2024 12:56 AM

குன்னுார்;குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை அருகே ஏற்பட்ட வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய அருவங்காடு சாலையோர வனப்பகுதியில் திடீரென வனத்தீ ஏற்பட்டது. இதன் அருகில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது.
உடனடியாக, தொழிற்சாலையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள், குன்னுார் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
அவற்றில் இருந்து நான்கு மணிநேரம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.