ADDED : ஜூலை 01, 2026 08:11 PM
ஊட்டி: ஊட்டி அரசு கலை கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வேதியியல், இயற்பியல், வனவிலங்கு உயிரியல் உள்ளிட்ட, 18 துறைகளில் உள்ள, 1100 க்கும் மேற்பட்ட இடங்களில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை நடந்தது.
கடந்த, 2026 –27 ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ள முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.
நடபாண்டில் பி.எஸ்.சி., வனவிலங்கு உயிரியல், கணினி அறிவியல், பி.காம்., சி.ஏ., பி.ஏ., பாதுகாப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினார். நேற்று, காலை கல்லுாரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் , பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மாணவர்கள் கூறுகையில், ‘முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களை, கல்லுாரி துவங்கி ஒரு வாரத்திற்குள்ளாவது விடுதிகளில் சேர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
