/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐவர் கால்பந்து போட்டி: மாணவர்கள் ஆர்வம்
/
ஐவர் கால்பந்து போட்டி: மாணவர்கள் ஆர்வம்
ADDED : மே 01, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி;கோத்தகிரி பெஸ்ட் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், ஐவர் கால்பந்து போட்டி துவங்கி நடந்து வருகிறது.
இதில், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பள்ளி முதல்வர் அர்ஜூணன் மற்றும் தலைவர் போஜன் ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர்.
ஒரு வாரம் நடைபெறும் இப்போட்டி தொடரில், 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. முதல் ஆட்டம், டிரீம் எப்.சி., அணி மற்றும் புல்சன் அணிகளுக்கு இடையே நடந்தது.
அதில், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரேம், கிரண் மற்றும் சேகர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.