ADDED : மே 13, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: தமிழகத்தில் வழிப் பாட்டுதலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்டு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுகடைகளை மூட மாநில முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.
நீலகிரியில,73 டாஸ்மாக் மதுகடை செயல்பட்டு வந்தது. இதில், முதல்வரின் நடவடிக்கையை அடுத்து, ஊட்டி அப்பர் பஜாரில், பந்தலுார், கோத்தகிரி, கேத்திபாலாடா, கூடலுார் ஆகிய பகுதிகளில் நேற்று வரை, ஐந்து மதுகடைகள் மூடப்பட்டன. வரும் நாட்களில் மேலும் சில கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
