/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு தாவரவியல் பூங்காவில் மலர் விதைகள்; துாவி நாற்று தயார்படுத்தும் பணி

ADDED : பிப் 23, 2025 11:50 PM

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மலர் விதைகள் துாவி, கூடுதல் நாற்றுகள் தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு, கோடை சீசன் நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பூங்காவில், வரும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதற்காக, சீசன் நாட்களில் பூத்துக் குலுங்கும் வகையில், தாவரவியல் பூங்காவினுள் பாத்திகளில் மலர் விதைகள் துாவி, நாற்றுகள் பயன்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக, சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், விதைக்கப்படும் விதைகள் அனைத்தும் முழுமையாக முளைத்திட ஏதுவாக, பூங்கா ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி பாத்திகளை பராமரித்து வருகின்றனர்.
பூங்கா ஊழியர்கள் கூறுகையில், 'பாத்திகளில் தூவப்பட்ட விதைகள் படிப்படியாக முளைத்து நாற்றுகளாக வளர்ந்து வர உள்ளதால், அடுத்த சில நாட்களில், நாற்றுகளை தனித்தனியாக பிரித்து எடுத்து, தொட்டிகளில் நடவு செய்து தயார் படுத்தப்படும்,' என்றனர்.