/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் பூத்து குலுங்கும் மலர்கள்
/
ஊட்டியில் பூத்து குலுங்கும் மலர்கள்
ADDED : ஏப் 27, 2024 01:24 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடைவிழா துவங்கி வார இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். மே 17ல் துவங்கும் மலர் கண்காட்சி முதல் முறையாக, ஒரு வாரம் நடக்கிறது. சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பூங்காவில், 250 வகையில், பல லட்சம் மலர்கள் மலர்ந்து வருகின்றன.
அதில், தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வந்த, டேலியா உள்ளிட்ட சில மலர்கள் முன்னதாகவே, பூத்து குலுங்குகின்றன.
தற்போதைய கடும் வெயிலில், புல்வெளியில் பராமரிக்கப்படும் தொட்டிகளில் உள்ள மலர்கள் வாடாமல் இருக்கவும், சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்க ஏதுவாகவும், கூரையுடன் கூடிய மாடத்தில், மலர் தொட்டிகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது. இதனை, சுற்றுலாப் பயணியர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

