/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்
/
இறுதி கட்ட ஆய்வில் பறக்கும் படை அதிகாரிகள்
ADDED : ஏப் 16, 2024 11:52 PM

பந்தலுார்:தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல், 19ல் நடக்கும் நிலையில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதி மீறி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறும் நிலையில், தமிழக கேரளா எல்லை பகுதிகளில், வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது. எல்லையோர சோதனை சாவடிகளான பாட்ட வயல், நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, கோட்டூர், மணல் வயல் உள்ளிட்ட, 11 சோதனை சாவடிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதில், கேரள மாநிலத்திலிருந்து அதிக அளவில் 'எம்சாண்ட்' மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு வரும் லாரிகளும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

