/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் நிலையத்தில் பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகள்
/
பஸ் நிலையத்தில் பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகள்
ADDED : ஆக 19, 2024 01:41 AM

கோத்தகிரி;கோத்தகிரி பஸ் நிலையத்தில், கான்கிரீட் தளம் பெயர்ந்து, கம்பிகள் நீட்டி கொண்டிருப்பதால், பயணிகள் காயமடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, சமவெளி மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு, 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், பத்துக்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோத்தகிரி பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள கான்கிரீட் தளம், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. பஸ்களின் இயக்கம் அதிகமாக இருப்பதால், பல இடங்களில் தளம் பெயர்ந்து, கம்பிகள் நீட்டியவாறு உள்ளன.
இதனால், நடந்து சென்றுவரும் பயணிகளின் பாதங்கள் காயம் ஏற்பட்டு வருகின்றன. பல பயணிகள் தடுக்கி விழுந்து வருகின்றனர். குறிப்பாக, அதிகம் நடமாடும் பள்ளி சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த கான்கிரீட் தளத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.