/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி: 'யுத்வான்; யுகே எப்.சி.,' அணிகள் வெற்றி

ADDED : ஜூன் 07, 2024 12:13 AM
கோத்தகிரி;கோத்தகிரி கடக்கோடு பெஸ்ட்பப்ளிக் பள்ளி மைதானத்தில் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அணிகள் பங்கேற்று விளையாடின.
அதில், 12 வயதுக்கு உட்பட்ட போட்டியில் யுத்வான் எப்.சி., அணிக்கும், புல்சன் அணிக்கும் இடையே இறுதிப்போட்டி நடந்தது. மிகவும் விறு,விறுப்பான இப்போட்டியில், யுத்வான் அணி, 1:0 என்ற போல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதே போல, 14 வயதுக்கு உட்பட்ட போட்டியில், கூடமலை எப்.சி., அணிக்கும், உயிலட்டி - குன்னியட்டி (யு.கே .எப்.சி.,) அணிக்கும் இடையே நடந்த இறுதி போட்டியில், ஆட்ட நேர இறுதிவரை எந்த அணியும் கோல் போடவில்லை. தொடர்ந்து, 'டைபிரேக்கர்' முறை கையாளப்பட்டது.
இதில், யு.கே.எப்.சி., அணி வெற்றி பெற்றது. சாதித்த அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதில், பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் அறங்காவலர்கள் உட்பட, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.