/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்
/
இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்
இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்
இரண்டாவது சீசனுக்கு பராமரிப்பு பணி தோட்டக்கலை துறை தீவிரம்
ADDED : ஆக 19, 2024 01:38 AM
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனுக்காக மலர் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டு தோறும் கோடை சீசனில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில், இரண்டாவது சீசன் செப்., மாதம் துவங்கவுள்ளது. அதில், இரண்டு லட்சம் மலர்கள் இடம்பெறவுள்ளன. இதற்காக, தாவரவியல் பூங்காவில் பாத்திகள், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுக்கள், மற்றும் மலர் தொட்டிகளில் உள்ள நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் பராமரித்து தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சுமார், 250 வகை மலர்கள், 10 ஆயிரம் மலர் தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.