/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெட்டப்பட்ட மரங்கள் வனத்துறை விசாரணை
/
வெட்டப்பட்ட மரங்கள் வனத்துறை விசாரணை
ADDED : ஆக 26, 2024 01:59 AM
கூடலுார்;கூடலுார், ஓவேலி, தருமகிரி பகுதியில்,செக் ஷன்-17 நிலத்திலிருந்து, சில்வர் ஓக் உள்ளிட்ட, 21 மரங்கள் வெட்டப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார், ஓவேலி வனச்சரகம், தருமகிரி பகுதியில், தனியார் கைவசம் உள்ள, செக் ஷன்-17 நிலத்தில் சில்வர் ஓக், பலா உள்ளிட்ட மரங்களை வெட்டி, பதுக்கி வைத்திருப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
வன அலுவலர் உத்தரவுப்படி, ஓவேலி வனச்சரகர் சுரேஷ், வனவர் சுபேத்குமார் மற்றும் வன ஊழியர்கள், அப்பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின், செக் ஷன்-17 நிலத்தில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், '19 சில்வர்ஓக் மற்றும் ஒரு பலா மற்றும் ஒரு பன்னீர் கொய்யா,' என, 21 மரங்களை அனுமதியின்றி வெட்டி, பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. வனத்துறையினர், மரங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அதன் விபரம் மாவட்ட வன அலுவலர் மூலம், கலெக்டர் தலைமையிலான மாவட்ட கமிட்டிக்கு அனுப்பப்படும். கமிட்டியின் உத்தரவை தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

