/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் எஸ்டேட் மேலாளர் வீட்டில் வனத்துறையினர் சோதனை நான்கு 'ஏர்கன்' பறிமுதல்
/
தனியார் எஸ்டேட் மேலாளர் வீட்டில் வனத்துறையினர் சோதனை நான்கு 'ஏர்கன்' பறிமுதல்
தனியார் எஸ்டேட் மேலாளர் வீட்டில் வனத்துறையினர் சோதனை நான்கு 'ஏர்கன்' பறிமுதல்
தனியார் எஸ்டேட் மேலாளர் வீட்டில் வனத்துறையினர் சோதனை நான்கு 'ஏர்கன்' பறிமுதல்
ADDED : ஏப் 18, 2024 05:11 AM

கூடலுார் : கூடலுார் ஓவேலி அருகே கழுத்தில் வெட்டு காயத்துடன் மர்மமான முறையில் காட்டெருமை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனியார் எஸ்டேட் மேலாளர் வீடு, அலுவலகத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கூடலுார் ஓவேலி நியூஹோப் அருகே, தனியார் தேயிலை தோட்டத்தில், சில நாட்களுக்கு முன், கழுத்தில் காயத்துடன் காட்டெருமை சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்துகிடந்தது.
கூடலூர் வன அலுவலகம் வெங்கடேஷ் பிரபு உத்தரவுப்படி, ஓவேலி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வனச்சரகர் சுரேஷ், வனவர் சுபேத்குமார் மற்றும் வன ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில், ஓவேலி நியூஹோப் அருகே உள்ள தனியார் எஸ்டேட் மேலாளர் பியர்சன் வீடு, சீனியர் மேனேஜர் அலுவலகத்தில் நேற்று ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். ஆய்வில், மேனேஜர் அலுவலகத்தில் இருந்து, 4 ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதில் மூன்று சேதம் அடைந்து இருந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், 'லைசென்ஸ் துப்பாக்கி தேர்தல் காரணமாக ஏற்கனவே போலீசார் ஸ்டேசனில் ஒப்படைத்து விட்டோம்; ஏர்கன் மட்டும் வைத்திருந்தோம்' என, மேலாளர் தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர் கூறுகையில், 'சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் வீட்டில் ஆய்வு செய்து, 4 ஏர்கன் பறிமுதல் செய்துள்ளோம்.
அதன் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளோம்,' என்றனர்.

