/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரத்தில் யானைகள் முகாம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
/
சாலையோரத்தில் யானைகள் முகாம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையோரத்தில் யானைகள் முகாம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சாலையோரத்தில் யானைகள் முகாம்; பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 01:23 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி டான்டீ பகுதியில் யானைகள் முகாமிட்டு உள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிகளவில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
இதனால் இரவு நேரத்தில், ஏலியஸ் கடை பகுதியில் இருந்து மாநில எல்லையான சோலாடி வரை, வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
'இந்த சாலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சேரம்பாடி டான்டீ தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
யானைகள் தேயிலை தோட்டத்தை ஒட்டி முகாமிட்டு உள்ளதால், வனக்குழுவினர் இப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் யானைகளை, போட்டோ எடுப்பதற்கும் பார்த்து ரசிப்பதற்கும் அருகே செல்ல வேண்டாம்,' என்றனர்.