/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முக்கூர்த்தி பூங்காவில் வரையாடுக்கு 'ரேடியோ காலர்' வனத்துறை செயலர்; உயர் அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஏப் 20, 2024 12:14 AM

கூடலுார்;முக்கூர்த்தி தேசிய பூங்காவில், வரையாடுகள் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள 'ரேடியோ காலர்' செயல்பாடுகள் குறித்து வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நம் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, தற்போது அழிவின் பிடியில் உள்ளது. இதனை பாதுகாக்க, மாநில அரசு, 2022ம் ஆண்டு திட்டமிட்டு, 25.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதன்பின், வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, செயல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முக்கூர்த்தி தேசிய பூங்காவில், வரையாடு திட்ட செயல்பாடுகள் குறித்து, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் துணைத் தலைவர் சுதன்ஷு குப்தா, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சீனிவாசன் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, உலகலாவிய வன விலங்குகளுக்கான நிதியம் மூலம், கடந்த மாதம் வரையாடு ஒன்றுக்கு, பொருத்தியுள்ள ரேடியோ காலர் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, யானைக்கு முகாம் சென்ற அதிகாரிகள், அங்கு கராலில் வைத்து பராமரிக்கப்படும், பண்ணாரியில் தாய் இறந்ததால் முகாமுக்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானை; கோவை நாயக்கன்பாளையம் கோமனுார் பகுதியில் தாயைப் பிரிந்ததால், முகாமுக்கு கொண்டு வரப்பட்ட குட்டி யானையையும் பார்வையிட்டு, அதன் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
ஆய்வில், முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் வித்யா, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வரையாடுகள் திட்ட இயக்குனர் கணேசன், உதவி திட்ட இயக்குனர் கணேசன் ராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.