/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை அறிவுரை
/
தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை அறிவுரை
ADDED : ஜூன் 26, 2024 09:27 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் செல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பந்தலுார் சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட காவயல், சேரங்கோடு, சின்கோனாவயல், சேரம்பாடி டான்டீ, மழவன்சேரம்பாடி, கண்ணம்வயல், கோல்ஸ்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில், 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த யானைகள் வனப்பகுதிகள் மற்றும் புதர்களை ஒட்டிய தேயிலை தோட்டத்திற்குள், முகாமிடுவதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சேரம்பாடி டான்டீ பகுதியில் தேயிலை இலை எடை போட்டுக் கொண்டிருந்தபோது, தொழிலாளர்களை நோக்கி யானைகள் வந்துள்ளது. இதனை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் யானையிடமிருந்து உயிர் தப்பினர்.
தொடர்ந்து வனக்குழுவினர் தோட்ட தொழிலாளர்கள் இலை பறிக்கும் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதிகளில் யானைகள் முகமிட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அப்பகுதிகளில் தனியாக செல்லாமல் கூட்டமாக செல்லவும், மழை மற்றும் மேகமூட்டம் இருப்பதால், யானைகள் இருப்பது தெரிய வந்தால் அந்த வழியாக செல்ல வேண்டாம்,' என, அறிவுறுத்தி உள்ளனர்.