/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காடுகள் மனித குலத்தின் தொட்டில் பாதுகாப்பது நமது கடமை
/
காடுகள் மனித குலத்தின் தொட்டில் பாதுகாப்பது நமது கடமை
காடுகள் மனித குலத்தின் தொட்டில் பாதுகாப்பது நமது கடமை
காடுகள் மனித குலத்தின் தொட்டில் பாதுகாப்பது நமது கடமை
ADDED : மார் 21, 2024 10:47 AM
கோத்தகிரி;கோத்தகிரி 'லாங்வுட்' சோலையில், உலக காடுகள் தின விழா, சிறப்பு இயற்கை முகாம் நடந்தது.
வனவர் விவேகானந்தன் வரவேற்றார். ரேஞ்சர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
லாங்வுட் சோலை பாதுகாப்பு செயலாளர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
காடுகள் மனித குலத்தின் தொட்டில். மனித நாகரீகம் தழைத்தது காடுகளில் இருந்து தான். அனைத்து வகையான உணவுப் பொருட்களும், 196 வகையான மருந்து பொருட்களும் காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் அமைப்பு, சோலை காடுகள் மற்றும் புல்வெளிகளாகும். சோலை காடுகள் மழை நீரின், 75 சதவீதம் மண்ணில் தேக்கி வைத்து, நீர் ஆதாரங்களாக வெளிப்படுத்துகிறது.
புல்வெளிகள், காற்றில் இருந்து, ஈரப்பதத்தை உறிஞ்சி, நீரை கொடுக்கிறது.
நீலகிரி, தென்னிந்தியாவின் நீர் தொட்டி என அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் ஓடும் நீரில், ஆறில் ஒரு பங்கு நீலகிரியில் தான் உற்பத்தியாகிறது. மேலும், காடுகள் அனைத்து விலங்கு, பறவைகள் மற்றும் பூச்சிகள் என, லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது.
ஒரு புலி வாழ்ந்தால், 50 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள காடு வாழும். அந்தக் காட்டில், அனைத்து உயிரினங்களோடு, ஆறு நதிகளும் உற்பத்தியாகும். எனவே, காடுகளை பாதுகாப்பது நமது கடமை. இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், 100 மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வனவர் மெய்ப்பசாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, களப்பணியாளர் சந்திரசேகர் செய்திருந்தார்.

