ADDED : ஜூலை 05, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் முத்தாலம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்,62. கடந்த, 2011ல் குன்னுார் நகராட்சி தலைவராக இருந்தார். 2014- 2019ம் ஆண்டுகளில், நீலகிரி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட இவர்,நேற்று அதிகாலை உறக்கத்தின் போது உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலுக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், சாந்திராமு; கூடலுார் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன்; அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று வெலிங்டன் எரியூட்டும் மையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் மகள் உள்ளனர்.