/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கி கவுரவிப்பு

ADDED : மார் 04, 2025 12:31 AM

குன்னுார், ; குன்னுாரில், 36 ஆண்டுகளுக்கு பிறகு அந்தோணியார் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1989ம் ஆண்டு பிளஸ்-2, கணித பாடப்பிரிவில், படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஓய்வு பெற்ற, கணித ஆசிரியர் வில்சன் ஜெயக்குமார்,வேதியியல் ஆசிரியர் ஜோசப் செங்கோல்நாதன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
அமெரிக்காவில் பல் டாக்டரான, முன்னாள் மாணவர் சதீஷ்குமாரால் வழங்கிய தங்க மோதிரங்கள், இருவருக்கும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் அனைவரும் 'குரூப்' போட்டோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து உணவுகள் பரிமாறப்பட்டு, ஒருவருக்கு, ஒருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.