/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மோசமான நிலையில் ஓடுதளம் குதிரை பந்தயம் நான்கு நாட்கள் ரத்து
/
மோசமான நிலையில் ஓடுதளம் குதிரை பந்தயம் நான்கு நாட்கள் ரத்து
மோசமான நிலையில் ஓடுதளம் குதிரை பந்தயம் நான்கு நாட்கள் ரத்து
மோசமான நிலையில் ஓடுதளம் குதிரை பந்தயம் நான்கு நாட்கள் ரத்து
ADDED : மே 28, 2024 12:13 AM
ஊட்டி;ஊட்டியில் கோடை சீசனில் முதல் நிகழ்ச்சியாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஆண்டு தோறும் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் கடந்த ஒரு மாதமாக வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், 'நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும்,' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடந்த சில நாட்களாக ஊட்டியில் மழை பெய்தது. மழையால் ஊட்டி குதிரை பந்தயம் ஓடுதளம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதால், குதிரை பந்தயம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மே 18, 19, 25,26 ஆகிய நான்கு நாட்கள் நடக்க இருந்த குதிரை பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட பந்தயங்கள், ஜூன், 1ம் தேதி நடைபெறுவதாக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில், வெலிங்டன் ராணுவ கோப்பை, நீலகிரி தங்க கோப்பை உள்ளிட்ட முக்கிய பந்தயங்கள் நடக்கிறது.