/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அன்னுாரில் நான்கு வழி சாலை அ மைக்கப்படும்' மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல்

ADDED : ஜூலை 19, 2024 11:48 PM
அன்னுார்:''அன்னுார் வழித்தடத்தில் நான்கு வழி சாலை அமைக்கப்படும்,'' என மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன், நேற்று மாலை அன்னூர் கைகாட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:
அவிநாசி அல்லது அன்னூரில் தொழில் பூங்கா அமைக்கப்படும். நீலகிரி தொகுதியில் வாக்களித்த இரண்டு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சேலத்தில் இருந்து அவிநாசி, அன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கப்படும். தொகுதியின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவோம். தேர்தலை சந்தித்தபோது தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட செயலாளர் ஜெயபால், வட்டாரத் தலைவர்கள் திருமூர்த்தி, ரத்தினசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.