/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நான்கு துணை மின் நிலையங்களில் இன்று மின் வினியோகம் இருக்காது
/
நான்கு துணை மின் நிலையங்களில் இன்று மின் வினியோகம் இருக்காது
நான்கு துணை மின் நிலையங்களில் இன்று மின் வினியோகம் இருக்காது
நான்கு துணை மின் நிலையங்களில் இன்று மின் வினியோகம் இருக்காது
ADDED : செப் 09, 2024 09:50 AM
ஊட்டி : நீலகிரியில் நான்கு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் இன்று மின் வினியோகம் இருக்காது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக, நீலகிரி கோட்ட பொறியாளர் சேகர் அறிக்கை:
அதிகரட்டி துணைமின் நிலையத்தில் இன்று, காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்படி அதிகரட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட, அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடி மட்டம், நுந்தளா, தாம்பட்டி மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல் உட்பட, 20 பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல், உப்பட்டி, சேரம்பாடி, கூடலுார் துணை மின் நிலையங்களில், 9 ம் தேதி, காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதன்படி, உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலுார் உட்பட, 11 பகுதியில் மின் வினியோகம் இருக்காது.
மேலும், சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி நகரம், கன்னம் வயல், நாயக்கன் சோலை, கையுண்ணி உட்பட, 8 பகுதிகள்; கூடலுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கூடலுார், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி உட்பட, 18 பகுதியில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.