/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டை உடைத்து திருட்டு நான்கு ஆண்டுகள் சிறை
/
வீட்டை உடைத்து திருட்டு நான்கு ஆண்டுகள் சிறை
ADDED : மார் 22, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;மேல் கூடலுார் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். கடந்த, 2021ல் இவர் வீட்டை உடைத்து டி.வி., உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றனர்.
கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதேபகுதியை சேர்ந்த குமரராஜ்,28, என்பவரை கைது செய்தனர். வழக்கு கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம், வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளி குமாரராஜாவுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.
தொடர்ந்து, அவரின் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு, ஓராண்டு நன்னடத்தை அடிப்படையில், விடுவிக்கப்பட்டார்.

