/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமுதாய கூடத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
/
சமுதாய கூடத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
ADDED : ஜூன் 26, 2024 09:26 PM

குன்னுார் : குன்னுார் அருகே சோகத்தொரை சமுதாய கூடத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கப்பட்டது.
குன்னுார் அருகே சோகத்தொரை கிராமத்தில், டாக்டர்கள் சித்ரலேகா, அசோகன் குழு சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி சோகத்தொரை சமுதாய கூடத்தில் துவங்கியது. துவக்க விழாவிற்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற டாக்டர் ராஜம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஊர் தலைவர் பசுபதி வரவேற்றார்.
இல்லம் தேடி கல்வி மையம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், மகளிர் இலவச தையல் பயிற்சி ஆகிய சேவைகள் செய்து வரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மகளிர் வாழ்வு மேம்பட கம்ப்யூட்டரின் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது. 20 மாணவிகள், பயிற்சி பெற்று வருகின்றனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பிரியா மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.