ADDED : மே 24, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்:
பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி, இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
பந்தலூர் அருகே, எருமாடு தனியார் மண்டபத்தில், கூடு டிரஸ்ட் மற்றும் பெங்களூரூ நயன ஜோதி டிரஸ்ட் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினார்கள்.
இதில், தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, பரிசோதனை செய்யப்பட்டது.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு நயன ஜோதி டிரஸ்ட் சார்பில் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை கூடு டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சன்னி துவக்கி வைத்தார். நயன ஜோதி டிரஸ்ட் இயக்குனர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், 50 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இதில், பாக்யலட்சுமி, ஜஸ்னாஜாஸ்மின் ஆகியோர் கண் பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.
