/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச பசுந்தீவனம்
/
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச பசுந்தீவனம்
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச பசுந்தீவனம்
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு இலவச பசுந்தீவனம்
ADDED : மே 07, 2024 11:26 PM

கூடலுார்:மசினகுடி பகுதியில், வறட்சியால் பாதித்துள்ள கால்நடைகளின் உணவு தேவை பூர்த்தி செய்ய, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச பசுந்தீவனம் வழங்கப்பட்டது.
முதுமலை மசினகுடி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, கால்நடைகள் உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றன. இதனை தடுக்க, 'அரசு பசுந்தீவனங்களை இலவசமாக வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்று, நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், மசினகுடி, மாமனல்லா, வாழை தோட்டம் பகுதிகளில், 140 பைனாளிகளுக்கு இலவசமாக பசுந்தீவனம் மற்றும் மினரல் மிக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சத்தியாநாராயணன் முன்னிலை வகித்து, கால்நடைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் காய்ந்த புற்கள், மினரல் மிக்ஸ் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.
அவர் கூறுகையில், 'நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முதல் கட்டமாக, 2000 கால்நடைகள் பயன் பெரும் வகையில், தலா ஐந்து டன் பசுந்தீவனம் மற்றும் காய்ந்த புற்கள், 140 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. மற்ற பகுதியில் உள்ள பயணிகளுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்,' என்றார்.

