/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவையம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை அவையம்
ADDED : ஏப் 26, 2024 01:43 AM

கூடலுார்;கூடலுாரில், 11 சிறப்பு குழந்தைகளுக்கு, 1.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை அவையம் வழங்கப்பட்டது.
கூடலுார் வட்டார வளர் மைய பள்ளி வளாகத்தில், தேசிய மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் அமைப்பான 'சக்ஷம்' சார்பில், வட்டார ஒருங்கிணைந்த சிறப்பு பள்ளி குழந்தைகளுக்காக செயற்கை அவையம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் விஜயகுமார், சக்ஷம் அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வம் முன்னிலை வைத்தனர்.
தொடர்ந்து, திருப்பூர் 'ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி' சங்கம், 'லோகாஷா' பாலிமர் நிறுவனம் நிதி உதவியுடன், 11 சிறப்பு குழந்தைகளுக்கு, 1.23 லட்சம் மதிப்பிலான அவையம் இலவசமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரியா, 'சக்ஷம்' அமைப்பின் நிர்வாகிகள் கண்ணன், ரத்தினசாமி மற்றும் சிறப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.

