/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
/
பந்தலுாரில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
ADDED : ஜூலை 11, 2024 10:33 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே தையல் பயிற்சி முடித்த பழங்குடியின பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பந்தலுார் அருகே, அய்யன்கொல்லி பகுதியில், ஐலேண்ட் அறக்கட்டளை சார்பில், பழங்குடியின பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஏசுதாசன் வரவேற்றார்.
அறக்கட்டளை இயக்குனர் அல்போன்ஸ்ராஜ் தலைமை வகித்து அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சியின் விவரங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மதுவிலக்கு பிரிவு தாசில்தார் சித்துராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாஜி, வக்கீல்கள் ஸ்ரீஜேஸ், மோகன் ஆகியோர்,'பழங்குடியின மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சாதிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்,' என்றனர். தையல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பிரதீபா நன்றி கூறினார்.